பாறைகளின் வகைகள்

0
7

பாறைகளின் வகைகள்

பாறைகளை அவை உருவான முறையின் அடிப்படையில் மூன்றாக வகைப்படுத்தலாம்.

 • தீப்பாறைகள்
 • படிவுப்பாறைகள்
 • உருமாறிய பாறைகள்

தீப்பாறைகள்:

 • புவி தோன்றி ஏறக்குறைய 4600 மில்லியன் வருடங்கள் ஆகின்றன. புவியில் கண்டெடுக்கப்பட்ட பழமையான பாறைகள் மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் எரிமலை வெடிப்பினால் உருவானவை.
 • ஒவ்வொரு முறையும் எரிமலை வெடிக்கின்ற பொழுது தீப்பாறைகள் உருவாகின்றன. இத்தகைய பாறைகள் நிலத்தின் அடியில் மாக்மா மெதுவாகக் குளிருகின்ற பொழுதோ அல்லது எரிமலையாக வெடித்து புவி மேற்பரப்பை அடைந்து குளிரும்பொழுதோ உருவாகின்றன. புவி ஓட்டிற்குக் கீழே பாறைக் குழம்பை ‘மாக்மா’ என அழைக்கிறோம்.
 • எரிமலையாக வெடித்து வெளியேறுகின்ற பாறைக்குழம்பை ‘லாவா’ என அழைக்கிறோம்.
 • பொதுவாக இப்பாறைகள் மிகவும் உறுதியானவை. தீப்பாறைகள் படிகங்களைக் கொண்டிருக்கும். இப்படிகங்களின் அளவு பாறைக்குழம்பு குளிருகின்ற வீதத்தைப் பொறுத்து அமைகின்றது.
 • மெதுவாகக் குளிர்ந்தால் பெரிய படிகங்களையும் வேகமாகக் குளிர்ந்தால் சிறிய படிகங்களையும் கொண்டிருக்கும். தற்சமயம் புவி ஓட்டில் காணப்படும் பாறைகளில் 95 சதவீதம் தீப்பாறை வகையைச் சார்ந்தவை.

படிவுப்பாறைகள்

 • சிதைந்த தீப்பாறைத் துண்டுகளில் இருந்து தோன்றுகின்ற மணல், மண்துகள் மற்றும் மண்படிவு போன்றவை ஒன்றின்மேல் ஒன்று படிந்து இறுகுவதால் படிவுப்பாறைகள் உருவாகின்றன.
 • படிவுப்பாறைகள் புவி ஓட்டில் 5 சதவீதம் மட்டுமே காணப்படினும் நிலப்பரப்பில் இப்பாறைகளின் பயன் 75 சதவீதமாகும்.

உருமாறிய பாறைகள்:

 • தீப்பாறைகளும் படிவுப்பாறைகளும் புவி மேலோட்டிற்கு கீழே வெகு ஆழத்தில் புதைந்து வளையும் பொழுதோ அல்லது மாக்மாவுடன் தொடர்பு கொள்ளும் பொழுதோ அதிக வெப்பத்திற்கும் அதிக அழுத்ததிற்கும் ஆட்படும்பொழுது உருமாறுகின்றன.
 • இத்தகைய உருமாற்றத்தால் அத்தகைய பாறைகளிலுள்ள கனிமங்கள் முழுமையாக மாற்றப்பட்டு விடுகின்றன. தவிர தற்சமயம் புவி மேலோட்டில் காணப்படும் பாறைகளில் உருமாறிய பாறைகள் ஒரு சதவீதமாகும். ஷ
 • மேற்கூறிய பாறைகள் யாவும் பாறைச்சுழற்சியின் மூலமாக புவி மேலோட்டில் உருவாவதும் சிதைவதும் மீண்டும் படிய வைக்கப்படுவதும் நிலையாக நடைபெற்ற வண்ணம் உள்ளது.
 • புவி மேற்பரப்பு மற்றும் உயிர்-புவி-வேதியியல் சுழற்சி ஆகியவற்றில் நடைபெறுகின்ற பல்வேறு செயல் முறைகளுக்கு பாறைகளின் சிதைவு முதல் படியாக அமைகிறது.
 • தவிர நீர்க்கோளம், பாறைக்கோளம் மற்றும் உயிர்க்கோளத்தில் காணப்படும் பல பண்புகளுக்கு அடிப்படையாகவும் விளங்குகிறது.
இதையும் படிக்க:  6th Standard தாவரங்களின் உலகம்

பாறைச்சுழற்சி

 • ஒரு சுழற்சி இயக்கத்தில் மெதுவாகப் புவி மேலோட்டிலுள்ள பாறைகள் உருவாகி, சிதைந்து மீண்டும் படிதல் என்பது நிலையாக நடைபெறுகிறது. இச்சுழற்சி தீப்பாறைகளின் சிதைவுடன் துவங்குகிறது. பாறைச்சுழற்சி மாற்றங்களை உள்ளடக்கிய ஒரு குழுமமாகும்.
 • தீப்பாறைப் படிவுப்பாறையாகவோ அல்லது உருமாறிய பாறையாகவோ மாறலாம். படிவுப்பாறை உருவமாறிய பாறையாகவோ அல்லது தீப்பாறையாகவோ மாறலாம். உருமாறிய பாறை தீப்பாறையாகவோ படிவுப் பாறையாகவோ மாறலாம். மாக்மா குளிர்ந்து படிமங்கள் தோன்றும் பொழுது தீப்பாறைகள் உருவாகின்றன.
 • உருகிய கனிமங்களை கொண்ட மாக்மா உயர் வெப்பநிலை கொண்ட திரவமாகும். கனிமங்கள் கனிமங்கள் குளிர்ந்து படிகங்களாக உருவாகின்றன. மாக்மா புவி மேலோட்டிற்கு அடியில் மெதுவாகக் குளிரும்பொழுதும் புவி ஓட்டிற்கு மேலே வேகமாகக் குளிரும்பொழுதும் தீப்பாறைகள் உருவாகின்றன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here