2018ஆம் ஆண்டில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்

0
63

ஆதவன் அகாடமி தொகுத்து வழங்கிய 2018ஆம் ஆண்டிற்கான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Current Affairs – 2018)

ஜனவரி:

 • தென்னிந்திய அளவில் அரசு மருத்துவமனைகளில் முதன் முறையாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தோல் வங்கி தொடங்கப்பட்டது.

 • 660 மெகாவாட் திறன் கொண்ட உடன்குடி அனல்மின் திட்டம் நிலை-1-க்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார்.

 • தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை ரூ.25,000-த்திலிருந்து ரூ.50,000ஆக தமிழக அரசு உயர்த்தியது.

 • உலக பசுமை நாடுகள் தரவரிசை பட்டியலில் இந்தியா 177-வது இடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

 • ‘சர்வதேச பறவைகள் திருவிழா’ 9-11ம் தேதி வரை உத்திரப்பிரதேச மாநிலம் துருவா தேசிய பூங்காவில் நடைப்பெற்றது. 

 • ஆக்ஸ்ஃபோர்டு அகராதியின் 2017-ம் ஆண்டிற்கான ஹிந்தி வார்த்தையாக ‘ஆதார்’ அறிவிக்கப்பட்டது. 

 • புகழ்பெற்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் தலைமை நிர்வாகியாக சலீல் பரேக் பொறுப்பேற்றார்.

 • ‘அவா’ புயல் மடகாஸ்கர் தீவை தாக்கியது.

 • உலகின் மிகப்பெரிய காற்று சுத்திகரிப்பு ஆலை சீனாவின் ஷாங்கி நகரில் அமைக்கப்பட்டது.

 • இந்தியாவின் 22-வது தலைமை தேர்தல் ஆணையராக ஓம்பிரகாஷ் ராவத் நியமனம் செய்யப்பட்டார். 

பிப்ரவரி:

 • தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹு நியமிக்கப்பட்டார்.

 • தமிழ்நாட்டில் 13.2.2018 முதல் இணைய வழியில் மட்டுமே பத்திரப்பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 

 • ஜெய்ப்பூரிலுள்ள காந்திநகர் ரயில் நிலையம் இந்தியாவின் முதல் முழுவதும் பெண்களால் இயக்கப்படும் ரயில் நிலையம் என்னும் பெருமையைப் பெற்றது. 

 • 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ‘பாலர் ஆதார் அட்டை’ அறிவிப்பு வெளியானது.
 • தனியாக போர் விமான இயக்கிய இந்தியாவின் முதல் பெண் பைலட் என்னும் பெருமையை அவனி சதுர்வேதி பெற்றார். 

 • உலகின் 6-வது பணக்கார நாடு இந்தியா என்று அறிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க:  DOWNLOAD PG TRB TAMIL Syllabus PDF – 2019

 • சவுதி அரேபியாவில் பெண்கள் ராணுவத்தில் வேர அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியது.

 • உலகின் முதல் ஓட்டுநர் அல்லாத தானியங்கி வாகனங்கள் துபாயில் மக்களின் பயன்பாட்டுக்கு வந்தன.

 • உலகிலேயே மிகச் சிறிய ராக்கெட்டை ஜப்பான் உருவாக்கியது.

 • உலகின் மிகவும் வயதான மனிதரான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 113 வயதான பிரான்சிஸ்கோ நூனெஷ் ஒலிவெரா மரணமடைந்தார்.

மார்ச்:

 • தமிழக அரசுக்கு மத்திய அரசின் ‘கிரிஷி கர்மான்’ விருது கிடைத்தது.

 • இந்தியாவின் மிகப்பெரிய காற்றாலை டர்பைன் ஜெனரேட்டர் தமிழ்நாட்டிலுள்ள சிங்கனேரியில் நிறுவப்பட்டது.
 • இந்தியாவின் மிக உயத்தில் அமைந்துள்ள சாலை காசியாபாத்தில் திறந்து வைக்கப்பட்டது. 

 • மின்சார உற்பத்தியில் உலகளவில், இந்தியா 3-வது நாடாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

 • இந்தியா-வங்காளதேச நாடுகளுக்கிடையேயான 8.3கி.மீ. எல்லைப்பகுதி முதல் முறையாக குற்ற மற்ற பகுதியாக அறிவிக்கப்பட்டது.

 • ‘உலகின் மிகச்சிறந்த விமான நிலையம்’ என்னும் பெருமையை சிங்கப்பூரிலுள்ள ‘சாங்கி’ விமான நிலையம் பெற்றது.

 • ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் நான்காவது முறையாக வெற்றி பெற்றார். 

 • உலகிலேயே மிகப்பெரிய தேசியக்கொடி பொலீவியாவில் உருவாக்கப்பட்டது.

ஏப்ரல்:

 • புவிசார் குறியீட்டுக்கு உதவி புரிந்ததற்காக, தமிழக வக்கீல் சஞ்சய் காந்திக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

 • கோயம்புத்தூர் பள்ளி மாணவி பல்வேறு வகையான யோகா நிலைகளை உருவாக்கி கின்னஸ் சாதனை நிகழ்த்தினார்.

 • விமானப் பயணிகள் அதிகரித்துவரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தைப் பெற்றது. 

 • பகல்நேரத்தில் 100மூ புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்தும் இந்தியாவின் முதல் நகரம் என்னும் பெருமையை ‘டையூ’ பெற்றுள்ளது.

 • இந்திய அனிமே’ன் துறை வல்லுநரான பீம் ஷேன் குரானா 17.4.2018 அன்று காலமானார்.

 • இந்தியாவின் மிக தூய்மையான விமான நிலையமாக மங்களுரு விமான நிலையம் அறிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க:  மனித உடல் அமைப்பு மற்றும் இயக்கம்

      மே:

 • சர்வதேச ரயில் பெட்டி கண்காட்சி 17-19-ம் தேதி வரை சென்னையிலுள்ள ரயில்பெட்டி தொழிற்சாலையில் நடைபெற்றது.

 • உலகின் முதல் முழுவதும் சூரிய சக்தியில் இயங்கும் விமான நிலையம் என்னும் பெருமையை ‘கொச்சி சர்வதேச விமான நிலையம்’ பெற்றது.

 • எவரெஸ்ட் மலை உச்சியை வெற்றிகரமாக பயணித்த இந்தியாவின் மிக இளம் வயதுப் பெண் என்னும் பெருமையை ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஷிவாங்கி பாதக்(16) பெற்றுள்ளார்.

 • இந்தியாவின் முதல் சூரிய சக்தியில் இயங்கும் ரயில் நிலையம் என்னும் பெருமையை கவகாத்தி ரயில் நிலையம் பெற்றது.

 • இந்தியாவில் மாநில முதல்வராக நீண்டகாலம் பணியாற்றிய பெருமையை சிக்கிம் முதல்வர் பவன்குமார் சாம்லிங் பெற்றார்.

ஜூன்: 

 • ‘இளந்தமிழ் ஆய்வாளர் விருது’ என்ற புதிய விருதை தமிழக அரசு அறிவித்தது.

 • 13-வது உலக தமிழ் பண்பாட்டு மாநாடு பெங்களுரில்
  16.6.2018 அன்று நடைபெற்றது.

 • அதிக சாரண, சாரணியர்களைக் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 3-ம் இடத்தைப் பெற்றது.

 • இஸ்ரோ தலைவர் கே. சிவனுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. 
 • உலகின் முதல் ‘சர்வதேச மனிதாபிமான தடயவியல் மையம்’ குஜராத் மாநிலத்தில்
  21.6.2018 அன்று துவக்கி வைக்கப்பட்டது.

 • இந்தியாவின் மிகக்குறைந்த வயது புத்தக ஆசிரியர் என்னும் பெருமையை ‘Honeycomb’ என்னும் புத்தகத்தை எழுதிய அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த அயான் கோகோய் கொஷெயின் என்ற சிறுவன் பெற்றான்.

          ஜூலை:

 • இந்தியாவின் 2-வது திருநங்கை வழக்கறிஙராக தூத்துக்குடியைச் சேர்ந்த எஸ்.விஜி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு செய்தார்.

 • பெங்களுர்-தூத்துக்குடி புதிய விமான சேவை 1.7.2018 அன்று தொடங்கியது.

 • இந்தியாவில் முதல் முறையாக ‘பழங்குடியின அட்லசை’ ஒரிசா அரசு வெளியிட்டது.
இதையும் படிக்க:  இயற்பியல் விதிகளில் முக்கியமான அடிப்படை விதிகள்

 • இந்தியாவின் முதல் தனியார் ‘ஆளில்லா வானூர்திகள்’ மற்றும் ‘குண்டு துழைக்காத வாகனங்கள்’ உற்பத்தி தொழிற்சாலை ராஜஸ்தானில் தொடங்கப்பட்டது.

ஆகஸ்ட்:

 • உலகின் நீளமான இருசக்கர வாகனம் உருவாக்கி சென்னை மாணவர்கள் சாதனை படைத்தனர்.

 • தமிழக முன்னாள் ஆளுநர் பீஷ்ம நாராயண்சிங் காலமானார்.

 • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 16.8.2018 அன்று காலமானார்.

 • முன்னாள் முதல்வர் கருணாநிதி 7.8.2018 அன்று காலமானார்.

செப்டம்பர்:

 • 50 கோடி பேருக்கு மருத்துவக்காப்பீடு அளிக்கும் ஆயஷ்மான் பாரத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 23-ம் தேதி துவக்கி வைத்தார்.

 • அனைத்து வயது பெண்களும் சபரிமலையில் வழிபடலாம் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு கூறியது.

அக்டோபர்:

 • உச்ச நீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் 3-ம் தேதி பதவியேற்றார்.
 • விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அரசுப் பணிகளில் வழங்கப்படும் உள் ஒதுக்கீடு 2மூத்திலிருந்து 3மூ-மாக உயர்த்தப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார்.

 • சீனா மற்றும் ஹாங்காங்கை இணைக்கும் உலகின் மிக நீண்ட கடல் பாலமானது 23-ம் தேதி திறக்கப்பட்டது.

 • தென்கொரியாவின் மிக உயரிய ‘சியோல் அமைதி விருது’ பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

நவம்பர்:

 • உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 6-வது முறையாக தங்கப்பதக்கம் வென்று மீண்டும் சாம்பியன் ஆனார் மேரி கோம்.

 • ஒரே ராக்கெட்டில் 5 செயற்கைக்கோள்களை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

     டிசம்பர்:

 • ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தலில் மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.  தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியும் (TRS), மிசோரமில் MNF எனப்படும் மிசோரம் தேசிய முன்னணியும் ஆட்சியைப் பிடித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here