தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும் – பாரதிதாசன்

0
9

                                                     பாரதிதாசன்

  • பிறப்பு : 29.04.1891
  • ஊர் : புதுச்சேரி
  • பெற்றோர் : கனகசபை – இலக்குமி அம்மையார்
  • இயற்பெயர் : கனக சுப்புரத்தினம்
  • ஆசிரியர் : திருப்புளிசாமி
  • புதுவை அரசினர் கல்லூரியில் (கால்வே கல்லூயில் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். இதற்கு முன்னர் சிறிது காலம் நிறவி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார்.
  • அப்போது இவருடைய வயது -16
  • “தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேறில்லாத மரம் கூடில்லாத பறவை”. என்று பாடிய இரசூல் கம்சதோவ் என்று ரஷ்ய கவிஞர் போலவே பாரதிதாசனும் விளங்கினார்.
  • பிற்காலத்தில் சிறகடித்த வானம்பாடிகளுக்கு இவரே முதலெத்தும் தலையெழுத்தும் ஆவார்.
  • தமிழ் மொழியும் தமிழரும் தமிழ்நாடும் சீற்பெற்று சிறக்கவே இவர் தன் பட்டறுவு முழுவதையும் பயன்படுத்தினார்.
  • பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகளை கவிதை வடிவில் தந்தவர்.
  • இவரின் உரைநடைகள் அனைத்தும் கவிதை நடை கொண்டவை.
  • இளமையிலேயே பிரஞ்சுமொழியிலும் தமிழமொழியிலும் புலமைப்பெற்று விளங்கினார்.
  • குடும்ப கட்டுப்பாடு பற்றி இந்தியாவிலேயே முதல் முதலில் பாட்டெழுதி பெருமை பெற்றவர் – பாரதிதாசன்.
  • புதுவையில் வெளியான ஏடுகளில் கிறுக்கன், கிண்டல்காரன். பாரதிதாசன் என பல புனைப்பெயர்களில் எழுதி வந்தார்.
  • பாரதி மீது கொண்ட பற்றின் காரணமாக பாரதிதாசன் என தன் பெயரை மாற்றிக்கொண்டார்.
  • தன் நண்பர்கள் முன்னால் பாடு என்று பாரதி கூற பாரதிதாசன்.
  • “ எங்கெங்கும் காணிணும் சக்தியட- தம்பி
  • ஏழுகடல் அவள் வண்ணமடா” என்று பாடினார்.
  • இந்த பாடலை பாரதியார் ஸ்ரீசுப்ரமணிய பாரதியின் கவிதா மண்டத்தை சேர்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது என குறிப்பிட்டு சுதேசமித்திரன் எனும் இதழுக்கு அனுப்பினார்.
  • 1929- ம் ஆண்டு குடியரசு, பகுத்தறிவு ஆகிய ஏடுகளில் கவிதை, கட்டுரை எழுத ஆரம்பித்தர்.
  • இவ்விரண்டு பத்திரிக்கையின் ஆசிரியர் தந்தை பெரியார்.
  • 1931 –ல் “புதுவை முரசு” என்ற ஏட்டினை சிறப்பாக நடத்தினார்.
  • 1938 –ல் பாரதிதாசனின் முதல் கவிதை தொகுப்பு வெளிவந்தது.
  • குயில் என்ற இலக்கிய இதழை நடத்தினார்.
  • 1946 ஜீலை 29-ல் சோமசுந்தர பாரதியார் தலைமையில் நடைபெற்ற விழாவில் அறிஞர் அண்ணா அவர்களால் பாராட்டப்பட்டு “புரட்சிக்கவி”எனும் பட்டம் வழங்கப்பட்டது.
  • 1954-ல் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • இவரை பின் தொடாந்த கவிஞர்கள் தங்களை பாரதிதாசன் பரம்பரை கவிஞர்கள் என அழைத்துக் கொண்டனர்.
  • Eg: i) முடியரசன் ii)வாணிதாசன்  iii)சுப்பிரத்தினதாசன் iv)கம்பதாசன் இவரது பாடல்கள்  செக் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:  TNPSC TAMIL QUESTIONS AND ANSWERS II

பாரதிதாசனின் சிறந்த தொடர்கள்:-

  • “தொண்டு செய்வாய் தமிழுக்கு துறைதோறும்துறைதோறும் துடித்தெழுந்தே”.
  • “இன்பத் தமிழ் கல்வி யாவரும் கற்றவர் என்றுரைக்கும் நுpலை எய்துவிட்டால்”.
  • “வாழ்வினில் செம்மையை செய்பவன் நீயே”. (புதுவை அரசின் தமிழ்தாய் வாழ்த்து பாடல்)
  • “எனை ஈன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள் இனமீன்ற தமிழ்நாடு தனக்கும் என்னால் தினையளவு நலமேனும் கிடைக்குமென்றால் செத்தொழியும் நாள் எனக்கு  திருநாளாகும்”.
  • “இனிமை தமிழ் மொழி எமது- எமக்கு இன்பந் தரும் படி வாய்த்தால் நல்லமுது”.
  • “எளிய நடையில் தமிழ் நூல் எழுதிடவும் வேண்டும் இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேணடும்”.
  • “தமிழ் எங்கள் பிறவிக்கு தாய்;”.
  • “தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர்”.
  • “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிமென்று சங்கே முழங்கு”.
  • எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டேன்”.
  • “கன்னல் சுவை தரும் தமிழே நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி”.
  • எல்லார்க்கும் எல்லாம்; என்று இருப்பதென இடம் நோக்கி நகர்கின்றது இந்த வையம்”.
  • “கொலை வாளினை எடடா – மிகு கோடியோர் செயல் அறவே”.
  • “தமிழாய்ந்த தமிழன் தான் தமிழ்நாட்டில் முதலமைச்சாய் வருதல் வேண்டும்”.
  • “தமிழுக்கு அமுதென்று பேர்”.
  • “உயிரை உணர்வை வளர்ப்பது தமிழு”.
  • “எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லையென்றால் இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும்”.
  • “தமிழின் விந்தையை எழுத தரமோ”.
  • “உள்ளே தொட்டால் உசிரில் இனிக்கும் தெள்ளுதமிழ்”.
  • “தமிழென்று தோல் தட்டி ஆடு – நல்ல தமிழ் வெல்க என்று தினம் பாடு”.
  • “செந்தமிழே நறுந்தேனே செயலினை மூச்சினை உனக்கு அளித்தேனே”.
  • “தமிழை பழித்தவனை தாய் தடுத்தாலும் விடாதே”.
  • “நல்லதோர் குடும்பம் பல்கலைக்கழகம்”.
  • “இருட்டறையில் உள்ளதடா உலகம்”.
  • “புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்”.
  • “பொதுவுடமைக் கொள்கையை திசை எட்டும் சேர்ப்போம்”.
  • “மதம் மனிதனின் மாற்றுச் சட்டை”.
  • “வள்ளுவனை பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே”.
  • “பாரடா உன் மானிட சமூகத்தை”.
  • “கல்வியில்லா பெண் களர் நிலம் போன்றவன்”.
  • “பெண்களுக்கு கல்வி வேண்டும் குடித்தனம் பேணுவதற்கே”.
  • “அகர முதலி ஒன்றை நாளும் படித்து வருவாய் நிகரில்லாத சொற்கள் நினைவில் நன்கு பெறுவாய்”.
  • “இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே”.
  • “தொண்டு செய்து பழுத்த பழம் தூய தாடி மார்பில் விழும்”.
  • “மானிட சமுத்திரம் நானென்று கூவு பிரிவிலை எங்கும் பேதமில்லை”.
  • “தேனொக்கும் செந்தமிழே நீ கனி நான் கிளி வேறென்ன வேண்டும் இனி”.
  • “உறுதி ஒன்றே சமூகம் என்று எண்ணாருக்கு இறுதி இறுதி”.
  • “சாவிலும் தமிழ் படித்து சாக வேண்டும்- என்சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்”.
  • “தமிழே ஆதி தாயே வாழ்க”.
இதையும் படிக்க:  TNPSC TAMIL QUESTIONS AND ANSWERS

பாரதிதாசனின் சிறந்த நூல்கள்:

  1. குடும்ப விளக்கு
  2. இருண்ட வீடு (நகைச்சுவை நூல்)
  3. அழகின் சிரிப்பு
  4. பாண்டியன் பரிசு
  5. எதிர்பாராத முத்தம்
  6. சேர தாண்டவம்
  7. சஞ்சீவ பர்வதத்தின் சாரல்
  8. இளைஞர் இலக்கியம்
  9. வீர தாய்
  10. நல்ல தீர்ப்பு
  11. தமிழச்சியின் கத்தி
  12. சௌமியன்
  13. குறிஞ்சி திரட்டு
  14. பிசிராந்தையார் (சாகித்ய அகாடமி)
  15. தமிழியக்கம்
  16. இசையமுது
  17. மணிமேகலை வெண்பா
  18. இரணியன்
  19. கண்ணகி புரட்சி காப்பியம்
  20. படித்த பெண்கள்
  21. காதல் நினைவுகள்
  22. காதலா கடமையா
  23. திருக்குறள் உரை

மறைவு :21.04.1964

  • 1990-ல் இவரது பாடல் நாட்டுடையாக்கப்பட்டது.

புகழுரை:

  • சுப்புரத்தினம் ஓர் கவி – பாரதியார்.
  • அறிவு கோவிலை கட்டி அதில் நம்மை குடியேற்ற விரும்புகின்ற பேரறிஞர் -புதுமைபித்தன்.
  • பாரதிக்கு பிறகு தமிழ்நாட்டின் ஓர் உண்மையான கவி – கு.ப.ராசகோபலன்.
  • இவர் தம் பாடல்களை படிக்கின்ற அந்நியனும் தமிழனாகி விடுவான் – சிதம்பரநாத செட்டியார்.
  • மன்னவர்க்கு மன்னன் மகா கவிஞன், பேரறிஞன், தன்னேரிலாத தமிழ்புலவன் கண் மறைந்தான். – கண்ணதாசன், (இப்பாடல்04.1964 மாலை முரசு இதழில் வெளிவந்தது).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here