பொதுத்தமிழ் வினாக்கள்

0
19

பொதுத்தமிழ் வினாக்கள்:

 1. “அங்கண்”என்ற சொல்லை பிரித்து எழுதுக?

விடை: அங்கண் = அம்+கண்

 1. “பூமி பாரத பெரும் பழம் பூமி”என்ற தொடரை முறையாக எழுதுக?

விடை: பாரத பூமி பழம் பெரும் பூமி

 1. “குடிமக்கள் காப்பியம்”என்று பெயர் பெற்ற நூல் எது?

விடை: சிலப்பதிகாரம்

 1. “நேயம்”என்ற சொல்லின் எதிர்ச்சொல் எது?

விடை: பகை

 1. “congratulation’ என்ற ஆங்கிலச் சொல்லின் நேரான தமிழாக்கம் எது?

விடை: நல்வாழ்த்துக்கள்

 1. “உலவு-உளவு-உழவு”என்ற சொற்களின் ஒலி வேறுபாடறிந்து பொருளை எழுது?

விடை: உலவு – உளவு – உழவு

 1. “ஈ”என்ற சொல்லின் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் என்ன?

விடை: கொடு

 1. “தருகிறான்”என்ற சொல்லின் வேர்ச்சொல் என்ன?

விடை: தா

 1. ‘பள்ளி’ என்னும் சொல் எந்தப் பெயர்ச்சொல்லின் வகையைச் சார்ந்தது?

விடை: இடப்பெயர்

 1. ‘நாறாமலர்’ என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு என்ன?

விடை: ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

 1. ‘இறையாமை பெண்மையின் முடிந்த நிலையாகும்’ என்ற விடைக்கரிய சரியான வினாவை எழுதுக?

விடை: பெண்மையின் முடிந்த நிலை யாது?

 1. ‘தமிழை நீங்கள் சரியாகப் படிக்கவில்லை’ என்ற தொடர் எவ்வகை வாக்கியம் என எழுது?

விடை: எதிர்மறை வாக்கியம்

 1. ‘புனையா ஓவியம் போல’ என்ற தொடரில் உவமையால் விளக்கப்பெறும் பொருளை எழுதுக?

விடை: அழகு

 1. ‘உவப்புத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்’ என்ற தொடரில் அமைந்துள்ள மோனை என்ன?

விடை: பொழிப்பு மோனை

 1. கு, சு, டு, து, பு, று என்ற வல்லின மெய்களின் மேல் உகரம் ஊர்ந்து வரும் எழுத்துக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இதையும் படிக்க:  H.A.கிருட்டிணப்பிள்ளை வாழ்க்கை குறிப்பு

விடை: குற்றியலுகரம்

 1. உவமைக்கும் உபமேயத்திற்கும் இடையே உவம உருபுகள் மறைந்து வருவதற்கு …………

விடை: உவமைத் தொகை

 1. நாயக்க மன்னர்கள் காலத்தில் தோன்றிய நாடகம் எது?

விடை: குறவஞ்சி

 1. ‘தாதுகு சோலை தோறும் சண்பகக்காடு தோறும்’ – எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?

விடை: கம்பராமாயணம்

 1. தேவநேயப் பாவாணருக்கு ‘செந்தமிழ் ஞாயிறு’ என்ற விருது யாரால் வழங்கப்பட்டது?

விடை: குன்றக்குடி அடிகளார்

 1. ‘உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்

………….’ – என்ற திருக்குறளின் ஈற்றடியை நிறைவு செய்க.

விடை: உள்ளத்துள் எல்லாம் உளன்.

 1. “கவி”என்பதன் பொருள் யாது?

விடை: குரங்கு

 1. “அகராதி”என்பது தற்பொழுது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

விடை: அகரமுதலி

 1. முன்னிலை-பின்னிலை என அமைத்துப் பாடப்படும் சிற்றிலக்கிய வகை எது?

விடை: உலா

 1. “முகநக நட்பது நட்பன்று”- என்ற “குறட்பாவில் இடம்பெற்றுள்ள அணி யாது?

விடை: சொல்பொருள் பின்வருநிலையணி

 1. வருமொழியின் முதல் எழுத்து உயிர் மெய்யாக இருப்பின் அதனை எவ்வாறு அழைப்பர்?

விடை: மெய்முதல்

 1. “அறிவுரைக்கோவை”என வழங்கப்பெறும் நூல் எது?

விடை: முதுமொழிக்காஞ்சி

 1. செயிற்றியம், முறுவல், நன்னூல், சயந்தம் இவற்றில் பொருந்தாத ஒன்று எது?

விடை: நன்னூல்

 1. பசுமை+குவளை என்ற சொற்களை சேர்த்து எழுது?

விடை: பசுமை+குவளை=பைங்குவளை

 1. பருதிபுரி என்பது யார் வழிபட்ட இடம்?

விடை: சூரியன்

 1. ‘கள்ளி’ எனும் ஆறு பாய்ந்த நாடு எது?

விடை: சேர நாடு

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here