சங்க காலம் – தமிழ் பண்பாட்டு வளர்ச்சி

0
12

சங்க காலம் – தமிழ் பண்பாட்டு வளர்ச்சி

 •   கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தமிழ்ப் பண்பாடு தோன்றிவிட்டது.  தமிழகத்து வணிகர்களும் கடலோடிகளும் கடல் கடந்த நாடுகளுடன் வணிகத் தொடர்புகளையும் கொண்டிருந்தனர்.
 • வெளிநாட்டு வணிகர்கள் கடல்வழியே தமிழகத்திற்கு வந்து போயினர்.  வேளிநாட்டினருடன் ஏற்பட்ட பண்பாட்டுத் தொடர்புகளும், வணிக நடவடிக்கைகளும், தமிழகத்தின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியும் வாழ்க்கை முறைகளும் இணைந்து தமிழ்நாட்டில் முதல் நகரமயமாதல் உருவானது.
 • தலைநகரங்களும் துறைமுகப்பட்டினங்களும் தோன்றின.  நாணயங்களும் பணமும் புழக்கத்திற்கு வந்தன. “தமிழ் பிராமி” என்ற வரிவடிவத்தில் தமிழ் மொழி முதன்முதலில் எழுதப்பட்டது.  ஆவணங்கள் உருவாக்கப்பட்டன.  செம்மொழித் தமிழ்ச் செய்யுள்கள் இயற்றப்பட்டன.

தொடக்க காலத் தமிழ்ச் சமூகம் குறித்து அறிந்து கொள்வதற்கான சான்றுகள்.

தொன்மைக்கால தமிழர்களின் வரலாற்றை அறிவியல்பூர்வமாக மீட்டுருவாக்கம் செய்வதற்குப் பல வகையான சான்றுகள் உதவுகின்றன.  அவை,

1)செவ்வியல் தமிழ் இலக்கியங்கள்

2)கல்வெட்டுகள்

3)தொல்லியல் அகழாய்வுச் சான்றுகள் மற்றும் பண்பாட்டுப் பொருள்கள்.

4)தமிழ் அல்லதா மற்றும் அயல்நாட்டினரின் இலக்கியக் குறிப்புகள்.

செவ்வியல் தமிழ் இலக்கியங்கள்

தொல்காப்பியம், பதினெண் மேல்கணக்கு நூல்கள், பதினெண் கீழ்கணக்கு நூல்கள், ஐம்பெருங்காப்பியங்கள் ஆகியவை சங்க காலத்தில் தோன்றிய செவ்வியல் தமிழ் இலக்கியங்கள் ஆகும்.  இவை சங்க கால மக்களின் வாழ்க்கை முறையை நன்க அறிய உதவுகின்றன.

தொல்காப்பியம்

தொல்காப்பியா இயற்றிய தொல்காப்பியம் தமிழின் பழமையான இலக்கண நூலாகும்.  இந்நூலின் முதலிரண்டு பகுதிகள் தமிழ் மொழியின் இலக்கணத்தை வரையறுக்கின்றன.  மூன்றாவது பகுதி மக்களின் சமூக வாழ்க்கைக்கான இலக்கணத்தை வரையறுக்கிறது.

இதையும் படிக்க:  தனிமங்களின் பட்டியல்/list of elements of the periodic table

பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் பதினென் மேல்கணக்கு நூலகள் என்று அழைக்கப்படுகின்றன.  தமிழில் தோன்றிய இலக்கியங்களில் காலத்தால் முற்பட்ட இலக்கியங்கள் இவை.  புதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் காலத்தால் பிந்தையவை.

எட்டுத்தொகை நூல்கள்:

 1. நற்றிணை
 2. குறுந்தொகை
 3. பரிபாடல்
 4. பதிற்றுப்பத்து
 5. ஐங்குநுறூறு
 6. கலித்தொகை
 7. அகநானூறு
 8. புறநானூறு

பத்துப்பாட்டு நூல்கள்:

 1. திருமுருகாற்றுப்படை
 2. பொருநராற்றுப்படை
 3. பெரும்பாணாற்றுப்படை
 4. சிறும்பாணாற்றுப்படை
 5. முல்லைப் பாட்டு
 6. நெடுநல்வாடை
 7. மதுரைக் காஞ்சி
 8. குறிஞ்சிப் பாட்டு
 9. பட்டினப்பாலை
 10. மலைபடுகடாம்

 பதினெண் கீழ்கணக்கு:

 •       வாழ்வியல் அறநெறிகளை எடுத்து இயம்புகின்ற பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்கணக்கு எனத் தொகுக்கப்பட்டுள்ளன.
 •       அவற்றுள் முதன்மையானது திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள்.  1330 குறட்பாக்களைக் கொண்ட திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்று மூன்று பால்களாகப் பகுக்கப்பட்டுள்ளது.

ஐம்பெருங்காப்பியங்கள்:

காப்பியங்கள் என்பவை கவிதை நயமுடைய செய்யுள்வடிவிலான நீண்ட இலக்கியப் படைப்புகளாகும்.

 1. சிலப்பதிகாரம்
 2. மணிமேகலை
 3. சீவகசிந்தாமணி
 4. வளையாபதி
 5. குண்டலகேசி

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here